‘மணல்கயிறு-2’ சென்சார் முடிந்தது!

’மணல்கயிறு-2’விறகு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 29-Sep-2016 10:36 AM IST VRC கருத்துக்கள்

விசு இயக்கத்தில் 1982-ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘மணல்கயிறு’. இப்படத்தில் விசு, மனோரமா, எஸ்.வி.சேகர் முதலானோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் ஆன நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம உருவாகியுள்ளது. ‘மணல்கயிறு-2’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த விசு, எஸ்.வி.சேகர் ஆகியோருடன எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர், ஜெகன்,அ பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். பட விநியோகத்திலும் தயாரிப்பிலும முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனைத்து வேலைகளும் முடிந்தவிட்ட இப்படம் நேற்று சென்சார் குழுவினர் பார்வைக்கு சென்றது. படக்குழுவினர் எதிர்பார்த்தது போலவே ‘மணல்கயிறு-2’விற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தரண் குமார் இசை அமைத்துள்ள இப்படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

#ManalKayiru #Visu #SveSekar #AswinSekar #Jagan #Poorna #SriThenandalFilms #ManalKayiru2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;