தமன்னா 15 நிமிடத்தில் ‘ஓகே’ செய்த படம்!

தமன்னாவின் ஆயுதபூஜை ட்ரீட்!

செய்திகள் 28-Sep-2016 3:04 PM IST VRC கருத்துக்கள்

‘தர்மதுரை’ பட வெற்றியை தொடர்ந்து தமன்னா நடித்து அடுத்து வெளியாகவிருக்கிற படம் ‘தேவி’. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா தமன்னா இணைந்து நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடித்தது குறித்து தமன்னா பேசும்போது,

‘‘என்னிடம் இப்படத்தின் கதையை சொல்ல ஏ.எல்.விஜய் சார் மும்பை வந்திருந்தார். அப்போது கதையை கேட்க ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே எனக்கு கதை பிடித்து விட்டது. விஜய் சாரிடம், ‘இனி மேல் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்றேன். நான் அப்படி சொன்னதும், ஏ.ஏல்.விஜய் சார் கொஞ்சம் ஷாக் ஆனார், கதை எனக்கு பிடிக்கவில்லையோ என்று! அதற்கு பிறகு அவரிடம், ‘இந்த கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இதில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்’’ என்று சொன்ன பிறகு தான் அவர் நார்மல் ஆனார்.

இப்படத்தில் விஜய் சார், பிரபு தேவா சார், சோனு சூட், ஆர்.ஜே.பாலாஜி முதலானோருடன் ஒர்க் பண்ணியது மறக்க முடியாத அனுபவம்! தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார்கள் என்றால் எங்களை எப்படியெல்லாம் வேலை வாங்கியிருப்பார்கள் என்று நினைத்து பாருங்கள். ‘தோழா, ‘தர்மதுரை’ படங்களுக்கு பிறகு ‘தேவி’யும் எனக்கு வித்தியாசமான ஒரு படமாக அமைந்துள்ளது’’ என்றார் தமன்னா!

இப்படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு சோலோவாக டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கு தமன்னா ஆடியுள்ள செம ஆட்டம் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையவிருக்கிறது. இந்த பாடல் காட்சியை படமாக்க மட்டும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டதாம்! அத்துடன் இப்பாடல் காட்சிக்காக தமன்னா 15 நாட்கள் ரிகர்சல் எடுத்து நடித்து கொடுத்துள்ளார். இப்பாடல் காட்சி ‘தேவி’யில் ஒரு ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். இது பிரபுதேவா படமாயிற்றே!

#Devi(L) #Dharmadurai #PrabhuDeva #Tamannah #DirectorVijay #AmyJackson #SonuSood #Devi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;