‘எந்திரன்-2’விலும் தொடரும் ஷங்கரின் வித்தியாசமான சென்டிமென்ட்!

ஷங்கர் படத்தில் ‘கலாபவன்’ மணியை தொடர்ந்து ‘கலாபவன்’ ஷாஜோன்!

செய்திகள் 28-Sep-2016 2:55 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கி வரும் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். விரைவில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படமாக திட்டமிட்டுள்ள ஷங்கர் இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக மலையாள நடிகர் ‘கலாபவன்’ ஷாஜோனை ஒப்பந்தம் செய்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘எந்திரன்’ படத்தில் கலாபவன் மணி, ‘ஐ’யில் சுரேஷ் கோபி ஆகியோரை நடிக்க வைத்திருந்தார். இதற்கு முன் ஷங்கர் இயக்கிய பெரும்பாலான படங்களிலும் மலையாள நடிகர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஷங்கரின் அந்த வித்தியாசமான சென்டிமென்ட் இப்போது ‘2.0’லும் தொடர்கிறது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘திருசியம்’ படத்தில் மோகன்லாலை போலீசில் சிக்க வைக்க துடிக்கும் போலீஸ் அதிகாரி (‘பாபநாசம்’ படத்தில் ‘கலாபவன்’ மணி எற்று நடித்த வேடம்…) கேரக்டரில் நடித்த ஷாஜோன் 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் படம் ஷங்கரின் ‘2.0’ என்பது குறிப்பிடத்தக்கது.

#Rajinikanth #Superstar #2.0 #MohanStudios #Shankar #LycaProductions #Enthiran #ARRahman #AmyJackson

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm


;