விஜய் ரொம்பவும் அமைதியானவர், மென்மையானவர்! – பிரபு தேவா

‘தேவி’யில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைத்து நடிக்கவில்லை! பிரபு தேவா

செய்திகள் 28-Sep-2016 12:36 PM IST VRC கருத்துக்கள்

பிரபு தேவா நடித்து தமிழில் கடைசியாக வெளியான படம் ‘எங்கள் அண்ணா’. இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் பிரபு தேவா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘தேவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபு தேவாவுடன் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார். மற்றும் சோனு சூத், நாசர், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அடுத்த மாதம் 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிற இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பிரபு தேவா பேசும்போது,

‘‘தேவி’ மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் முதன் முதலாக நடிக்கும்போது நன்றாக நடிக்க வேண்டும்என்று நினைத்து நடிக்கவில்லை. மாறாக, இயக்குனர் விஜய், தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். அதனால் காலையில் எழுந்தவுடன் எந்த ஐடியாவும் கொடுக்காமல் அவர்கள் சொல்லும்படி நடித்து கொடுத்தாலே போதும் என்று நினைத்து கடவுளீடம் வேண்டுவேன். ஏன் என்றால் நாம் ஏதாவது ஐடியா கொடுக்கப் போய் அது வேறு மாதிரி ஆகி விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான்! இதனை படம் முடியும் வரையிலும் கடை பிடித்தேன். அதனால் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இயக்குனர் விஜய் ரொம்பவும் பொறுமையானவர், மென்மையானவர். அவர் காட்சிகளை விளக்கும் விதம் எளிமையாக இருக்கும். சின்ன நடிகரிடம் கூட வேலை வாங்கும் விதம் அருமையாக இருக்கும். அவருக்கு கோபமே வராது! விஜய் இயக்கத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் தான்! இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ண திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்’’ என்றார்.

‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் பிரபுதேவாவும், டாக்டர் கே.கணேஷும் இண்ந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாஜித் வாஜித் இசை அமைத்துள்ளார். மனுஷ் நந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தேவி’யை தமிழகமெங்கும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

#Devi(L)PressMeet #Devi(L) #PrabhuDeva #Tamannah #DirectorVijay #AmyJackson #SonuSood #Devi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;