அஜித் -57 படத்தில் பாலிவுட் வில்லன்கள்?

அஜித்-57 படத்தில் மோதவிருக்கும் பாலிவுட் பிரபலங்கள்?

செய்திகள் 28-Sep-2016 11:59 AM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து அஜித்தும் சிவாவும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித்தின் 57-வது படத்தின் முதல்கட்ட வெளிநாட்டு படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் முதலானோர் நடிக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் அஜித் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்து வர, பாலிவுட்டை சேர்ந்த இரண்டு நடிகர்களை வில்லன்களாக நடிக்க வைக்க இயக்குனர் சிவா முடிவு செய்திருக்கிறார் என்றும் இவர்கள் சம்பந்தமான அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியடவிருக்கிறார் என்றும் குறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘தொடரி’ படத்தை தயாரித்த ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

#Veeram #Vedalam #AjithKumar #AK57 #KajalAggarwal #AksharaHaasan #SiruthaiSiva #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;