பாடலாசிரியர் அண்ணாமலை திடீர் மரணம்!

பாடலாசிரியர் அண்ணாமலை மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!

செய்திகள் 28-Sep-2016 11:36 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்த ‘சகுனி’, விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’, ‘வேலாயுதம்’, தனுஷ் நடித்த ‘உத்தமபுத்திரன்’ மற்றும் ‘கோலிசோடா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஹரிதாஸ்’, உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதியவர் அண்ணாமலை. இவர் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று காலமானார். இவருக்கு வயது 49. இவரது முதல் திரைப்பாடல் நாஞ்சில் கென்னடி இயக்கிய ‘புது வயல்’ என்ற படத்தில் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் ‘கும்மாளம்’. இதில் ‘திம்சு கட்ட அடடா திம்சு கட்ட…’ என்று இவர் எழுதிய பாடல் மிக பிரபலம் ஆனது. அதைப்போல ‘வேட்டைக்காரன்’ படத்திற்காக இவர் எழுதிய ‘என் உச்சி மண்டையில் சுர்ருங்குது…’ என்ற பாடலும் மிக பிரபலம் ஆனது! இதைப் போல 50 படங்களுக்கும் மேல் பாடல்கள் எழுதிய அண்ணாமலை ஏரளமான தொலைக்காட்சி தொடர்களுக்கும் பாடலகள் எழுதியுள்ளார். அண்ணாமலையின் சொந்த ஊர் திருவண்ணாமலை. வார இதழ் ஒன்றில் உதவி ஆசிரியராக பணியாற்ற துவங்கி, பிறகு டி.வி. சீரியல்கள், பக்தி பால்கள், திரைப்பட பாடல்கள் எழுதி வந்த அண்ணாமலையின் திடீர் மறைவு தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன் தான் பிரபல பாடலாசிரியரான நா.முத்துக்குமார் இவ்வுலகை விட்டு சென்றார் அந்த துக்கம் இன்னும் மாயாத நிலையில் இப்போது மற்றொரு பாடலாசிரியரையும் தமிழ் திரையுலகம் இழந்து தவித்து வருகிறது.

#NaMuthukumar #Annamalai #Vettaikaaran #Velayudham #Salim #Haridas #Saithan #VijayAntony #Vijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;