சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’வுக்கு எதிர்பார்த்த சென்சார் ரிசல்ட்!

‘ரெமோ’ படக்குழுவினருக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி!

செய்திகள் 27-Sep-2016 5:34 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படம்! ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது இப்படம். இதனை முன்னிட்டு சென்சாருக்கு சென்ற இப்படத்திற்கு படக்குழுவினர் எதிர்பார்த்தது மாதிரியே அனைவரும் பாரக்க கூடிய படமாக ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருக்கிறது. இதனால் ‘ரெமோ’ படக்குழுவினர் மேலும் உற்சாகத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் கவனித்துள்ளார். ஒலிப்பதிவை ரசூல் பூக்குட்டி கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது. ‘24 AM STUDIOS’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ரஜா தயாரித்துள்ள முதல் படம் ‘ரெமோ’ என்பது குறிப்பிடத்தக்கது.

#Remo #SivaKarthikeyan #KeerthySuresh #Anirudh #24AMSTUDIOS #RDRaja #Saranya #BhagyarajKannan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;