‘ஆங்கிலப்படம்’ ஆனது இங்கிலீஷ் படம்!

ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி நடிக்கும் ஆங்கிலப் படம்!

செய்திகள் 27-Sep-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ள படம் ‘இங்கிலீஷ் படம்’ இப்படத்தில் ராம்கி முக்கிய கேரக்டரில் நடித்திருக்க, ‘குளிர் 100’, ‘சகாக்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த சஞ்சீவ், புதுமுகம் ஸ்ரீஜா தாஸ், மீனாட்சி, சிங்கம் புலி, சிங்கமுத்து, இயக்குனர் குமரேஷ் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இசை அமைப்பாளர் எம்.சி.ரிகோ இசை அமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ராதாரவி பேசும்போது,

‘‘இப்படத்தில் ராம்கி ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் (வெள்ளை தாடி, முடியுடன்) நடித்திருப்பதை பார்த்தேன்! வெள்ளை தாடி முடியுடன் வரும் ரஜினி, அஜித்தை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்களுக்கு அடுத்தபடியாக இந்த லுக்கில் ராம்கி ரொம்பவும் ஸ்மார்ட் ஆகவும் அழகாகவும் இருக்கிறார்’’ என்றார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘‘முடிந்தவரையும் படங்களில் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அப்போது தான் வரிவிலக்கு போன்ற சலுகைகள் கிடைக்கும். இப்படத்தின் பாடல்களையும் டிரைலரையும் பார்த்தப்போது உண்மையிலேயே இப்படத்தின் இயக்குனர் குமரேஷ் குமார் கெட்டிக்காரர் என்பதையும், ஏதோ ஒரு விஷயத்தை மாறுபட்ட வகையில் சொல்ல வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். இப்படம் நிச்ச்யம் வெற்றிபெறும்’’ என்றார்.

அதற்கு பிறகு பேசிய படத்தின் இயக்குனர் குமரேஷ் குமார், “இந்த படத்திற்கு ‘ஆங்கில படம்’ என்று டைட்டில் வைக்க ஒரு காரணம் இருக்கிறது. படத்தில் பல ட்விஸ்ட்கள் இருக்கிறது. அதைப்போல தலைப்பிலும் ஒரு ட்விஸ்ட் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தலைப்பை சூட்டினோம். இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் முதலில் படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் தான் தர முடியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு நாங்கள் ‘யு’ சர்டிஃபிக்கெட்டுக்காக போராடினோம். அந்த போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்தது. படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கினார்கள். அதனால் ‘இங்கிலீஷ் படம்’ என்ற டைட்டிலை மாற்றி சுத்த தமிழில் ‘ஆங்கில படம்’ என்று வைத்துள்ளோம்’’ என்ற அறிவுப்பு செய்தார்.
’ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.ஜெ.ஆர்.வாசுகி தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை சாய் சுரேஷ் கவனித்திருக்கிறார். தமிழில் உருவாகியுள்ள இந்த ‘ஆங்கிலப் பட’த்தை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

#EnglishPadam #Ramki #Sanjeev #KumareshKumar #Meenakshi #SingamPuli #Singamuthu #RadhaRvai #Natraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

6 அத்தியாயம் - ட்ரைலர்


;