விஜய் ஆண்டனி பட இயக்குனருடன் இணையும் சிபிராஜ்!

சிபிராஜை இயக்கும் ‘சைத்தான்’ பட இயக்குனர்!

செய்திகள் 27-Sep-2016 10:02 AM IST VRC கருத்துக்கள்

‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’கட்டப்பாவை காணோம்’. இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே சிபிராஜ் தனது அடுத்த பட அறிவிப்பு செய்துள்ளார். ‘கட்டப்பாவை காணோம்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமாக விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சைத்தான்’ படத்தை இயக்கி வரும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிபி ராஜ். இப்படத்தின் டைட்டில் மற்றும் இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Sibiraj #KattapavaKaanom #NaaigalJaakirathai #JacksonDurai #Kshanam #PrasathMurugesan #VijayAntony #Saithan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கட்டப்பாவ காணோம் - டிரைலர்


;