சூப்பர் ஹிட்டான ‘தெறி’, ‘கபாலி’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயரிக்கும் அடுத்த படத்தை ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினி இயக்கவிருக்கிறார். ‘கோச்சடையான்’ படத்தை இயக்கி அனுபவம் பெற்ற சௌந்தர்யா இயக்கும் இப்பம் புதிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாகவிருக்கிறது. இதற்காக திறமையானவர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் சௌந்தர்யா ரஜினி மற்றும் ‘கலைப்புலி’ எஸ்.தாணு! இது சம்பந்தமாக இருவரும் சேர்ந்து நேற்று மாலை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் திறமையானவர்கள் தங்களது புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை neekcasting@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ ஆல்லது +91 9629337116 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையானவர்களுக்கு ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க வழி பிறந்துள்ளது.
#Kabali #KalaipuliSThanu #Soundarya #Rajinikanth #Kochadaiyaan #Dhanush #Chiranjeevi
நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து...