2000 நடிகர்கள் பங்கேற்க, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படப்பிடிப்பு!

பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படப்பிடிப்பு!

செய்திகள் 26-Sep-2016 1:09 PM IST VRC கருத்துக்கள்

‘கயல்’ சந்திரனும, ‘பிச்சைக்காரன்’ படப் புகழ் சாதனா டைட்டஸும் இணைந்து நடிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. சுதர் இயக்கி வரும் இப்படம் பிரபல விளையாட்டையும், திரைப்படத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் மையமாக கொண்டு உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்பட குழுவினர் இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை மிக திட்டம் போட்டு படமாக்கியுள்ளனர். இந்த காட்சியில் சந்திரன், சாதனா டைட்டஸ் ஆகியோருடன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்று நடித்திருக்கிறார்கள். கலை இயக்குனர் ரெமியன் கைவண்ணத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் போன்ற செட்டில் இந்த படப்பிடிப்பு எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றுள்ளது. ‘இந்த காட்சி இப்படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் சுதர்.

‘2 MOVIE BUFF’ என்ற நிறுவனம் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் மற்றும் 'ACROSS FILMS' நிறுவனம் சார்பில் பிரபு வெங்கடாசலம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துவங்கி விட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;