விஷாலின் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு துவங்கியது!

விஷால், மிஷ்கின் இணையும்  ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 26-Sep-2016 12:00 PM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் பிரசன்னா, வினய், பாக்யராஜ் ஆகியோரும் நடிக்கும் இப்படத்திற்கு மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’, பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க-2’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த அரோல் கரோலி இசை அமைக்கிறார். சுராஜ் இயக்கத்தில விஷால் கதாநாயகனாக நடிக்கும் ’கத்தி சண்டை’ பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் தீபாவளிக்கு பிறகு வெளியாகும என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் போல மிஷ்கின் இயக்கி வந்த ‘சவரக்கத்தி’யின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் விஷால் மற்றும் மிஷ்கின் முதன் முதலாக இணையும் ‘துப்பறிவாளனி’ன் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.

#Mysskin #Thupparivalan #Vishal #Prasanna #VishalFilmFactory #ArrolKaroli #KaththiSandai #Suraaj #Tamannah

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;