‘அகிரா’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். காமெடி கேரக்டருக்காக ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என பன்முகங்கள் கொண்ட எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் படு பயங்கர வில்லனாக நடிக்கிறார் என்றும் அதற்காக ‘சிக்ஸ் பேக்’ உடம்பை உருவாக்க தற்போது கடும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸுடன் இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவுக்கு சதோஷ் சிவன் என கூட்டணி அமைத்துள்ள இப்படம அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிரபார்க்கப்படுகிறது.
#SJSuryah #Isai #Iraivi #Selvaraghavan #NenjamMarapadhillai #MaheshBabu #ARMurugadoss #HarrisJayaraj
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு...
‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்,...