சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்திற்கு இசை அமைக்கும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி அடுத்து அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ‘ஹிப் பாப் தமிழா’ அதி இப்படத்தின் கம்போசிங்கை விரைவில் துவங்கவிருக்கிறார். ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகரும், படத்தொகுப்பை புவன் ஸ்ரீனிவாசனும் கவனிக்கிறார்கள். இது அதர்வாவும், நயன் தாராவும் இணைந்து நடிக்கும் முதல் படமாகும்!
#DemonteColony #AjayGnanamuthu #ImaikkaNodigal #AtharvaaMurali #Nayanthara #RDRajashekar #BhuvanSrinivasan #HipHopThamizha
நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் மார்க்கெட்டை போலவே தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட்...
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய...
‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படம் ‘குருதி ஆட்டம்’. இந்த படத்தில் அதர்வா...