‘கொடி’ - தனுஷ் தரும் சர்பிரைஸ்!

‘கொடி’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் எப்போது?

செய்திகள் 26-Sep-2016 10:28 AM IST VRC கருத்துக்கள்

‘தொடரி’யை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’கொடி’. துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டரை நாளை மறுநாள் (28-9-16) வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ‘கொடி’யில் இரண்டு வேடங்களில் நடிக்கும் தனுஷுக்கு ஒரு ஜோடி த்ரிஷா, இன்னொரு ஜோடி ‘பிரேமம்’ படப் புகழ் அனுபமா பரமேஸ்வரன். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’தொடரி’க்கு மாறுபட்ட விமர்சனங்கள் கிடைத்தாலும் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் தனுஷ், தனது ரசிகர்களுக்கு ‘கொடி’யை தீபாவளி ட்ரீட்டாக தரவிருக்கிறது.

#Kodi #Dhanush #Thodari #DuraiSenthilKumar #KaakiSattai #EthirNeechal #Premam #Trisha #AnupamaParameswaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர்


;