‘ரேனிகுண்டா’ இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி!

’ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 24-Sep-2016 2:39 PM IST VRC கருத்துக்கள்

‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ என வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் விஜய்சேதுபதி, அடுத்து ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கதில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் அஜித்தை வைத்து ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ முதலான வெற்றிப் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#VijaySethupathi #Renigunda #PanneerSelvam #AMRatnam #KeerthiSuresh #18Vayasu #NICArts #AandavanKattalai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;