‘பைரவா’ தமிழ் நாடு உரிமையை கைபற்றிய ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்!

சூடு பிடிக்கும் ‘பைரவா’ பட வியாபாரம்!

செய்திகள் 24-Sep-2016 1:58 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ’விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும ‘பைரவா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும், வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்து விடுமாம்! படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்னதாகவே ’பைரவா’வின் தமிழக விநியோக உரிமையை ‘ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியிருக்கிறது. இதனை அந்நிறுவத்தினரே தங்களது மைக்ரோ ப்ளாக் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் ‘பைராவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ‘பைரவா’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Vijay #Theri #Bairavaa #SriGreenProductions #AzhagiyaTamizhMagan #Bharathan #KeerthySuresh #SanthoshNarayanan #VijayaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;