தோணியிடம் கேள்வி கேட்ட சூர்யா மகள்!

தோணியை மகிழ்ச்சிப்படுத்திய சூர்யா குழந்தைகள்!

செய்திகள் 24-Sep-2016 10:35 AM IST VRC கருத்துக்கள்

பிரபல கிரிக்கெட் வீரரான தோணியின் வாழ்க்கை வரலாறை மையப்ப்டுத்தி ஹிந்தியில் எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘M.S. Dhoni: The Untold Story’. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இப்படத்தில் தோணி பாத்திரத்தில் சுஷாந்த் சிங் ரஜ்புத் நடித்திருக்கிறார். இந்த படம் ‘எம்.எஸ்.தோணி’ என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறாது. வருகிற 30அ-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் புமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தோணி பேசும்போது,

‘‘என் வாழ்க்கை கதையை படமாக இருக்கிறோம் என்று சொன்னபோது முதலில் அதை நம்பவிலலை. சும்மா சொல்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் திடீரென்று ஒரு நாள் இயக்குனர் நீரஜ் பாண்டே ஸ்கிரிப்ட்டுடன் வந்து என்னை ஆச்சரியப்படுத்தினார். இதில் எனது கேரக்டரில் நடித்துள்ள சுஷாந்த் என்னை அப்படியே பிரதிபலித்து நடித்துள்ளார். இனி அடுத்த படங்களில் நடிக்க அவர் இதிலிருந்து வெளியே வரவேண்டும்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எனக்கு ரஜிகாந்தை ரொம்பவும் பிடிக்கும். அவர், பேசிய ‘என் வழி தனி வழி’ என்ற பஞ்ச் வசனம் எனக்கு ரொம்பவும பிடிக்கும்’ என்று சொன்ன தோணி, அதை ரஜினி ஸ்டைலில் மேடையில் நடித்தும் காட்டினார். அதைப் போல சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தை பார்த்ததிலிருந்து அவரையும், அவரது நடிப்பும் எனக்கு பிடிக்கும். அதைப் போல சென்னை பிரியாணி, ஃபில்டர் காப்பி முதலானவை எனது விருப்பமான உணவுகளாகி விட்டது’’ என்றார்.

நடிகர் சூர்யாவின் மகள் தியா, மகன் தேவ் இருவரும் தோணியின் தீவிர ரசிகர்கள் என்பதால் நடிகை ஜோதிகா அவர்களை இவ்விழாவுக்கு அழைத்து வந்திருந்தார். தோணியை சந்திக்க மேடைக்கு வந்த இரு குழந்தைகளும் தோணிக்கு பூங்கொத்து வழங்கி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து தியா தோணியிடம், ‘‘உங்கள் ஸ்கூல் டேஸ் எப்படி?’’ என்று கேள்வியை எழுப்ப, அதற்கு சிரித்தவாறே பதில அளித்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தினார் தோணி! அதனை தொடர்ந்து சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தை பார்த்து மகிழ்ந்த தருணங்கள் பற்றியும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சி முடிந்ததும் தோணி நேராக ரஜினிகாந்தை சந்திக்க புறப்பட்டு சென்றுவிட்டார்!
குழந்தைகள் தியா, தேவ் ஆகியோர் தோணியை சந்தித்து மகிழ்ந்த தருணத்தை நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்,.

#MSDHONI #Suriya #Rajinikanth #SPBCharan #Divyadharshini #Jyothika #Diya #Dev

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;