‘சர்வர் சுந்தர’த்திற்காக துபாய் சென்ற சந்தானம்!

துபாயில் ‘சர்வர் சுந்தரம்’

செய்திகள் 23-Sep-2016 3:11 PM IST VRC கருத்துக்கள்

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பாக ஜெஆ.செல்வகுமார் தயாரிக்கும படம் ‘சர்வர் சுந்தரம்’. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா நடிக்கிறார். சென்னை, கோவா மற்றும் தென்காசியில் முக்கிய கட்சிகளை படமாக்கிய படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ளனர். அங்கு பன்னிரெண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் ஒரு பாடல், கிளைமேக்ஸ் மற்றும் முக்கியமான ஒரு காட்சி படமாக்கப்படவிருக்கிறார்கள். இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு பி.கே.வர்மா என கூட்டணி அமைத்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ பட்த்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;