சிம்புவின் ‘பேயோ போபிலியா’ பாடலுக்கு விளக்கம் தரும் ‘ரம்’ டீம்!

சிம்பு பாடிய பாடலுக்கு விளக்கம் தரும் ‘ரம்’ டீம்!

செய்திகள் 23-Sep-2016 11:22 AM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பாட்டதாரி’ பட புகழ் ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் விவேக், ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜியார்ஜ், அம்ஜத் முதலானோரும் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கும் இப்பத்திற்காக நடிகர் சிம்பு ‘பேயோ போபிலியா..’ என்று துவங்கும் பாடல் பாடியிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘போபியோ’ என்ற வார்த்தைக்கு பயம் என்பது பொருள்! இதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் ’போபிலியா’ என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அதற்கான அர்த்ததை விளக்குகிறது ரம் டீம்!

‘‘பேய் என்று ஒன்று இருக்கிறதா எனப்தை உணர்த்துடம் பாடல் தான் எங்களின் ‘பேயோ போபிலியா’. அது மட்டுமின்றி இறந்தவர்களின் ஆத்மா கூட இந்த திகில் நிறைந்த உலகுக்கு வர யோசிக்கும். இந்த கருத்தை வலியுறுத்தி தான் இப்பாடலை உருவாக்கியுள்ளோம்.இந்த பாடலை சென்னை அருகே உள்ள படப்பையில் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் இப்பாடலை எழுதியிருக்கும் விவேக் வேல்முருகன்! ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.#RUM #HolaAmigo #STR #Peiyophobilia #Hrishikesh #Anirudh #RumMovieUpdate #VIP

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;