‘தொடரி’ ரிசல்ட், ஆஸ்கரில் ‘விசாரணை’ : நன்றி தெரிவித்த தனுஷ்!

‘தொடரி’ ரிசல்ட், ஆஸ்கரில் ‘விசாரணை’ : நன்றி தெரிவித்த தனுஷ்!

செய்திகள் 23-Sep-2016 11:12 AM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் தான் நடித்த ‘தொடரி’ ரிலீஸ், இன்னொருபுறம் தான் தயாரித்த ‘விசாரணை’ படம் ஆஸ்கருக்குப் பரிந்துரை என இரட்டை சந்தோஷ நாளாக நேற்றைய பொழுது அமைந்துவிட்டது தனுஷிற்கு. தொடரி படத்தைப் பொறுத்தவரை விமர்சனங்கள் இருவேறாக அமைந்துவிட்டாலும், சாமான்ய மக்களிடம் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில், தொடரி படத்தின் ரிசல்ட் குறித்தும், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விசாரணை குறித்தும் நன்றி தெரிவித்திருக்கிறார் தனுஷ்.

‘‘உண்மையில் இது எனக்கு மகத்தான ஒரு நாளாக மாறிவிட்டது. ‘தொடரி’ படத்திற்கு பாசிட்டிவ் ரிப்போர்ட்கள் குவிந்து கொண்டிருந்த அதேவேளையில், இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படமாக ‘விசாரணை’யும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. என் மீதும், என் நிறுவனத்தின் படைப்புகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்குமே என் நெஞ்சார்ந்த நன்றிகள். விசாரணை படத்தில் நடித்த தினேஷ், சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோருக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். அதேபோல், வுண்டபர்பார் நிறுவனத்தின் தூணாக செயல்படும் எக்ஸிக்யூடிவ் புரொடியூசர் எஸ்.வினோத்திற்கும் என் நன்றிகள்!

படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், நலன்விரும்பிகள், ரசிகர்கள் மற்றும் சினிமாவை நேசிப்பவர்கள், படத்தை தியேட்டரில் கண்டுகளித்தவர்கள் என அனைருக்கும் என் இதயத்திலிருந்து மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ்.

#Dhanush #Thodari #Visaaranai #Vetrimaaran #WunderbarFilms #Dinesh #Samuthrakani #Kishore

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;