மணிரத்னம், ஷங்கர், கமல் வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன்!

இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம்!

செய்திகள் 22-Sep-2016 5:33 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துகொண்டு, ரிலீஸ் சமயத்தில் விமர்சனரீதியாக பாராட்டுக்களை அள்ளிக்குவித்து, ரிலீஸுக்குப் பிறகும் விருதுகளைக் குவித்தால் அது எத்தனை பெரிய சாதனை. அப்படிப்பட்ட சாதனைக்குச் சொந்தமான சொற்ப படங்களின் பட்டியலில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்திற்கும் தாராளமாக இடமுண்டு. ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், 3 தேசிய விருதுகளையும் வென்று அசத்தியது விசாரணை திரைப்படம். இப்போது அந்த புகழ் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக, இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படமாக ‘விசாரணை’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு இதுபோல், இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைப்பட்ட இந்திய படங்களில் நமது தமிழ் படங்கள் இடம்பிடித்த பட்டியல் கீழே...

1. தெய்வமகன் (1969)
2. நாயகன் (1987)
3. அஞ்சலி (1990)
4. தேவர் மகன் (1992)
5. குருதிப்புனல் (1995)
6. இந்தியன் (1996)
7. ஜீன்ஸ் (1998)
8. ஹேராம் (2000)
9. விசாரணை (2016)

மணிரத்னம், ஷங்கர், கமல் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களின் பட்டியலில் இப்போது வெற்றிமாறனும் இணைந்திருக்கிறார்.

#Visaaranai #Vetrimaran #Dhanush #AttakathiDinesh #Maniratnam #Shankar #Kamal #GVPrakash #WunderbarFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;