‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பில் லிங்குசாமி அல்லு அர்ஜுன் இணையும் படம்!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12-ஆவது பட அறிவிப்பு!

செய்திகள் 22-Sep-2016 12:29 PM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்தின் 12-ஆவது தயாரிப்பாக பிரம்மாண்டமான படம ஒன்று உருவாகவிருக்கிறது. இப்படத்தில் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில உருவாகும் இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இந்த பட அறிவிப்பு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும்போது,

‘‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘சில்லுன்னு ஒரு காதல்’ 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியானது. இந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘பருத்தி வீரன்’ மாதிரி நல்ல ஒரு கதை! இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜுனை தமிழில் அறிமுகப்படுவதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஆண்டு ஃபிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி அடுத்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இப்படம் சம்பந்தமான மற்ற விவரங்களை பூஜைக்கு முன்னதாக தெரிவிப்போம்’’ என்றார்.

இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, ‘‘இந்த படம் எப்போதோ துவங்க வேண்டிய படம! ஆனால் இப்போது தான் எல்லாம் கை கூடி வந்துள்ளது. ‘சண்டக்கோழி-2’ படத்தை இயக்கி முடித்ததும இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜுனை தமிழில் அறிமுகப்படுத்துவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

அல்லு அர்ஜுன் பேசும்போது, ‘‘நான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்! கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சென்னையில் தான் இருந்திருக்கிறேன். தெலுங்கில் 18 படங்கள் நடித்திருந்தாலும், தமிழில் நல்ல ஒரு படம் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று விரும்பினேன். அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. பிறந்து வளர்ந்த ஊரில், ஒரு படம் பண்ணுவது சந்தோஷமான விஷயம்’’ என்றார்.

#StudioGreen #AlluArjun #KEGnanavelRaja #Lingusamy #Sivakumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெஹந்தி சர்க்கஸ் - ட்ரைலர்


;