கார்த்தியின் ஆயுத பூஜை ட்ரீட்!

கார்த்தியின் ‘காஷ்மோரா’ டிரைலர், பாடல்கள் தேதி அறிவிப்பு!

செய்திகள் 22-Sep-2016 11:07 AM IST VRC கருத்துக்கள்

‘ஜோக்கர்’ படத்திற்கு பிறகு ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாணட தயாரிப்பாக உருவாகியுள்ள படம் கார்த்தி நடிக்கும் ‘காஷ்மோரா’. கோகுல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்க, கார்த்தியின் அப்பாவாக விவேக் நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்கத்தை செய்துள்ளார் ராஜீவன்.

தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ‘காஷ்மோரா’வின் டிரைலர் மற்றும் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையி;ல் நேற்று இரவு காஷ்மோர குறித்த அறிவிப்பு வெளியானது. அதாவது, அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ஆம் தேதி ஆயுத பூஜை ‘ட்ரீட்’டாக ‘ காஷ்மோரா’வின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று படக்குழிவினர் அறிவித்துள்ளார்கள். இதனால் கார்த்தியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கார்த்தி நடித்த படங்களிலேயே இப்படம் பெரும் பொருட் செல்வில் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;