விஜய்யின் ‘பைரவா’வில் ‘பாபநாசம்’ பட வில்லன்!

விஜய்யின் ‘பைரவா’வில் ‘பாபநாசம்’ பட வில்லன்!

செய்திகள் 21-Sep-2016 4:08 PM IST VRC கருத்துக்கள்

மலையாள ‘திருசியம்’ மற்றும் அதன் தமிழ் ரீ-மேக்கான ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ரோஷன் பஷீர்! ‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து ரோஷன் பஷீருக்கு விஜய்யின் ‘பைரவா’ படத்தில் நடிக்கும் வாயப்பு கிடைத்துள்ளது. ‘பைரவா’வில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து ரோஷன் பஷீர் கூறியிருப்பதாவது,

‘‘நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தை பார்த்து தான் இயக்குனர் பரதன் சார் என்னை ‘பைரவா’வில் நடிக்க அழைத்தார். படத்தில் எனக்கு சிறிய கேரக்டர் தான்! ஆனால் ‘பாபநாசம்’ படத்தைப் போலவே இப்படத்திலும் என் கேரக்டர் கதையில் முக்கியத்துவமுள்ளதாக இருக்கும். நான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. விஜய் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்’’ என்று கூறியுள்ள ரோஷன் ‘பைரவா’வின் ரிலீஸை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

விஜய்யின் ‘தெறி’ படத்தில் இடம் பெற்றிருந்ததைப் போலவே ‘பைரவா’விலும் கேரளா மற்றும் மலையாள குடும்ப பின்னணி இடம் பெறுகிறது. கேரளா பின்னணி கொண்ட கேரக்டர்களில் மலையாள குணச்சித்திர நடிகர் விஜயராகவன், நடிகை அபர்ணா வினோத் முதலானோர் நடிக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

#Papanasam #KamalHaasan #Drsihyam #RoshanBazeer #Vijay #Bairavaa #Bharathan #VijayaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;