சரண் இயக்கத்தில் ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தில் நடித்திருக்கும் வினய் அடுத்து, ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘நேத்ரா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த படம் தவிர மிஷ்கின் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்திலும் நடிக்கிறார் வினய் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் ‘அஞ்சாதே’யில் வில்லனாக நடித்த பிரசன்னா ‘துப்பறிவாள’னில் முக்கிய வேடம் ஒன்றை ஏற்க, வினய் வில்லனாக நடிக்கிறாராம். தற்போது ‘சவரக்கத்தி’ பட வேலைகளில் பிசியாக இருக்கும் மிஷ்கின் ‘துப்பறிவாள’னின் படப்பிடிப்பை வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறாராம்.
#Vishal #Mysskin #Thupparivalan #Prasanna #VinayRai #UnnaleUnnale #RakulPreetSingh #Anjathey
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
‘கூர்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த காமெடி நடிகர் யோகி பாபு முதன் முதலாக ஒரு படத்தில் இரட்டை...