‘காக்கா முட்டை’ படம் மூலம் பாலிவுட் படமான ‘டாடி’யில் அர்ஜுன் ராம்பாலுடன் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மலையாள பட மொன்றில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற தகவலை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தோம். மலையாள திரையுலகின் பிரபல இயக்குனரான சத்தியன் அந்திக்காடு இயக்கும் படம் ;ஜோமோன்டெ சுவிசேஷங்கள்’. இப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க, இவருடன் இரண்டு பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள. அந்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ‘பிரேமம்’ பட புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவிலுள்ள திருச்சூரில் துவங்கியது. இப்படத்தில் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரனுடன் மனோபாலாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சத்தியன் அந்திக்காடும், துல்கர் சல்மானும் முதன் முதலாக இணையும் இந்த படத்திற்கு வித்யா சாகர் இசை அமைக்கிறார்.
#KakkaMuttai #AishwaryaRajesh #DulquerSalman #ManoBala #SathiyanAnthikadu #AnupamaParameshwaran
‘வாயை மூடி பேசவும்’, ‘ஒகே கண்மணி’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடன இயக்குனராக விளங்கி வருபவர் பிருந்தா. இவர் ஒரு படத்தின் மூலம்...