மீண்டும் இணையும் ‘முண்டாசுப்பட்டி’ டீம்!

மீண்டும் ‘முண்டாசுப்பட்டி’  ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால்!

செய்திகள் 21-Sep-2016 10:51 AM IST VRC கருத்துக்கள்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து ‘மாவீரன் கிட்டு’ படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால், அடுத்து தனது இரண்டாவது சொந்த தயாரிப்பில் நடிக்கவிருக்கிறர். அறிமுக இயக்குனர் முருகானந்தம இயக்கும் இப்பத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது அடுத்த பட அறிவிப்பையும் செய்துள்ளார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதை ட்வீட் செய்துள்ளார் விஷ்ணு விஷால். இப்படம் சம்பந்தமான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் விஷ்ணு! சுசீந்தின் இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ‘மாவீரன் கிட்டு’அ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்து விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பில் உருவாகும் படம், அதற்கடுத்து ராம குமார் இயக்கும் படம் என விஷ்ணுவின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படமும் ரிலீஸை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது.

#Mundasuppatti #VishnuVishal #Ramkumar #Suseendiran #MaveeranKittu #Nandita #IdamPorulEval

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;