உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24’

சில்க் ரோடு உலகத்திரைப்பட விழாவில பங்கேற்கும் முதல் தமிழ் படம் சூர்யாவின் ‘24’

செய்திகள் 21-Sep-2016 10:35 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம ’24’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரான இப்படத்தில் அசூர்யாவின் மாறுபட்ட நடிப்பு குறித்து ஏராளமான திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். இப்போது 24 படத்திற்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. அதாவது, 2016- ஆம் ஆண்டிற்கான சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் ‘மீடியா ஹானர்’ போட்டி பிரிவில் சூர்யாவின் ‘24’ திரையிட தேர்வாகியுள்ளது. இந்த உலக திரைப்பட விழாவில பங்கேற்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்ற சிறப்பும் சூர்யா 24-க்கு கிடைத்துள்ளது. இது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகும்.

#24Movie #Suriya #Samantha #VikramKumar #2DEntertainment #Singam3 #ARRahman #S3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;