ஐ, வேதாளம், புலி சாதனைகளை முறியடித்த ‘ரெமோ’ டிரைலர்!

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ டிரைலர் யு டியூபில் புதிய புதிய சாதனைகளை படைத்து வருகிறது!

செய்திகள் 21-Sep-2016 9:56 AM IST Chandru கருத்துக்கள்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் டிரைலர் செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணியளவில் யு ட்யூபில் வெளியிடப்பட்டது. 24 ஏஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் நன்கு திட்டமிடப்பட்ட விளம்பர யுக்தி, சிவகார்த்திகேயனின் நர்ஸ் கெட்அப், கீர்த்தி சுரேஷின் மார்க்கெட், டெக்னிக்கல் உட்சபட்சங்கள் என ‘ரெமோ’ படத்திற்கு ஆரம்பம் முதலே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக, ‘ரெமோ’ டிரைலர் வெளியான முதல் 14 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வையிடல்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது.

தற்போது ‘ரெமோ’ டிரைலர் வெளியாகி 40 மணி நேரம் ஆகியிருக்கும் நிலையில், அது 25 லட்சம் பார்வையிடல்களைக் கடந்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஷங்கரின் ‘ஐ’ டீஸர் 40 மணி நேரத்தில் 23 லட்சங்களையும், அஜித்தின் ‘வேதாளம்’ 40 மணி நேரத்தில் 21 லட்சங்களையும், விஜய்யின் ‘புலி’ 20லட்சத்திற்கும் குறைவான பார்வையிடல்களையும் பெற்றிருந்தன. தற்போது அந்த சாதனைகள் ‘ரெமோ’ டிரைலரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

#Remo #Sivakarthikeyan #Puli #Vedalam #I #KeerthySuresh #24amstudios #RDRaja #Kabali #Theri

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;