ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்காக சென்னை வந்த மகேஷ் பாபு!

ஏ.அர்.முருகதாஸ், மகேஷ் பாபு படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட்!

செய்திகள் 20-Sep-2016 5:48 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கியது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெறவிருக்கிறது. இதற்காக மகேஷ் பாபு சென்னை வந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்காக சென்னை அருகே பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்துள்ளார்கள். இந்த செட்டில் 20 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்க, கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

#ARMurugadoss #MaheshBabu #RakulPreetSingh #Akira #SonakshiSinha #SJSuriya #SanthoshSivan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;