‘கோல்டன் குளோப் விருது’ போட்டியில் பிரியதர்சனின் ‘சில சமயங்களில்’

சில சமயங்கள் படத்திற்கு கோல்டன் குளோப் விருது கிடைக்குமா?

செய்திகள் 20-Sep-2016 4:03 PM IST VRC கருத்துக்கள்

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘காஞ்சிவரம்’ படத்தை இயக்கிய பிரியதர்சன் இயக்கியுள்ள படம் ‘சில சமயங்களில்’. ‘காஞ்சிவரம்’ படத்தில் பட்டு நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொன்ன பிரியதர்சன் ‘சில சமயங்களில்’ படத்தில் ‘எய்ட்ஸ்’ என்னும் கொடிய நோயை கதைக் கருவாக்கியிருக்கிறார். இப்படத்திலும் ‘காஞ்சிவரம்’ படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்க இவர்களுடன் ஒரு முக்கிய கேரக்டரில் அஷோக் செல்வனும் நடித்துள்ளார். இளையராஜ இசை அமைத்துள்ளார். இந்த படம் உலக புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 1988-ல் மீரா நாயர் இயக்கிய ‘சலாம் பாம்பே’ படத்திற்கு பிறகு ‘கோல்டன் குளோப்’ விருதுக்கான நாமினேஷனில் இடம் பெறும் படம் இது தானாம். அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் கோல்டன குளோப் விருதை தேர்வு செய்யும் குழுவினருக்கு முன்பாக ‘சில சமயங்களில்’ திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது. இதற்காக இயக்குனர் பிரியதர்சன், நடிகர் பிரகாஷ் ராஜ், இப்படத்தை தயாரித்திருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய், டாக்டர் கணேஷ் முதலானோர் லாஸ் எஞ்சல்ஸ் செல்லவிருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக கௌரவ மிக்க விருது ‘கோல்டன குளோப் விருது’ என்று கூறப்படுகிறது.

#SilaSamayangalil #Priyadharshan #Kanchivaram #PrakashRaj #SriyaReddy #Ilayaraja #GoldenGlobe

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;