ரஜினிக்கு அடுத்து சூர்யா! – தோணி சாய்ஸ்

தோணிக்கு பிடித்த கோலிவுட் நடிகர்கள்?

செய்திகள் 20-Sep-2016 12:53 PM IST VRC கருத்துக்கள்

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான தோணிக்கு தமிழ் சினிமா நடிகர்களில் ரொம்பவும் பிடித்தவர் யார் என்றார்ல் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்! ரஜினி காந்தின் தீவிர ரசிகரான தோணியிடம் சமீபத்தில் நடந்த ஒரு நேர் காணலில் உங்களுக்கு மிகவும் பிடித்த 3 கோலிவுட் நடிகர்கள் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்! அதற்கு பதிலளித்த தோணி, எனக்கு பிடித்த நடிகர்களில் ஒன்றும், இரண்டும் மூன்றாவது இடத்திலும் இருப்பவர் ரஜினிகாந்த் என்றும் அவருக்கு அடுத்த படியாக நடிகர் சூர்யாவை ரொம்பவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்
அஜய் தேவ்கன் நடித்த ‘சிங்கம்’ படத்தை தோணி பார்த்திருக்கிறார். இப்படம் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ தமிழ் படத்தின் ரீ-மேக் என்று பிறகு கேள்விப்பட்ட தோணி தமிழ் ‘சிங்கம்’ படத்தையும் பார்த்திருக்கிறார். சூர்யாவின் ‘சிங்கம்’ படத்தை பார்த்ததிலிருந்து தோணி, நடிகர் சூர்யாவுக்கும் ரசிகராகி விட்டார்.

சூர்யா குறித்து தோணி பேசிய வீடியோவை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தோணிக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, ‘இந்த வீடியோவை பார்த்து என் வீட்டு குழந்தைகள் உட்பட அனைவரும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்கள் என்றும் உங்கள் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘M.S. Dhoni: The Untold Story’ திரைப்படத்தை பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா!

#MSDhoni #Suriya #Rajinikanth #Singam #Kabali #AjayDevgn

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;