ஒரேயொரு பாடல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ‘தகி தகிக்க’ வைத்ததொன்றால் அது சூப்பர்ஸ்டாரின் ‘நெருப்புடா...’ பாடல்தான். ‘கபாலி’ டீஸரின் பின்னணி இசையாகவும் சந்தோஷ் நாராயணன் இதைப் பயன்படுத்தியிருந்ததால், இப்பாடலை முழுதாக எப்போது கேட்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். இதனால், இப்பாடலின் லிரிக் வீடியோ யு ட்யூபில் வெளியிடப்பட்டதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அதனை கண்டு, கேட்டு மகிழ்ந்தனர். இதன் காரணமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டு 3 மாதத்திலேயே 2 கோடி பார்வையிடல்களை எட்டி சாதனை படைத்தது. தற்போது இப்பாடலுக்கு 2 கோடியே 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து தற்போது சிம்புவின் ‘தள்ளிப்போகாதே...’ பாடலும் இந்த சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்பாடலின் லிரிக் வீடியோ இந்த வருடம் ஜனவரி 16ஆம் தேதி யு ட்யூபில் வெளியிடப்பட்டது. தற்போது ‘தள்ளிப்போகாதே...’ பாடல் 2 கோடி பார்வையிடல்களை எட்டியுள்ளது.
#ThalliPogathey #STR #Kabali #NeruppuDa #Simbu #AchchamEnbathuMadamaiyada #Guatham menon #AYM
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...