‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’ ஆகிய படங்களை தயாரித்த ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ ரவீந்தர் அடுத்து தயாரிக்கும் படம் ‘ நட்புனா என்னனு தெரியுமா’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் இயக்குகிறார். இவர், இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ‘சரவணன் மீனாட்சி தொடரில்’ நடித்த கவீன் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார. ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், இளவரசு, அழகம் பெருமாள், மன்சூரலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மூன்று நணபர்கள் ஒரு பெண்ணை காதலிக்க விரும்புகிறார்கள். இவர்கள் மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியை தன் மீது காதல்வயப்பட வைக்கிறார் என்பது தானாம் இப்படத்தின் மைய கரு! இப்படத்திற்கு தரண் இசை அமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
#LibraProduction #SuttaKathai #NalanumNandhinium #NatpunaEnnanuTheriyuma #Nelson #Kavin #RamyaNambeesan
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ ஹீரோ’. இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த...