சூப்பர் ஹிட் அடித்த ‘ரெமோ’ டிரைலர்!

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ டிரைலருக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையிடல்கள் கிடைத்துள்ளன

செய்திகள் 20-Sep-2016 10:50 AM IST Chandru கருத்துக்கள்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியானது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ டிரைலர். ’24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரிதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதாலும், பி.சிஸ்ரீராமின் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்களாலும் படத்தின் மீது ரசிகர்களுக்கு பன்மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று திட்டமிட்டபடி ‘ரெமோ’ டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. கலர்ஃபுல்லாகவும், ரொமான்டிக் காமெடியாகவும் உருவாக்கப்பட்டிருந்த இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக 14 மணி நேரத்திற்குள்ளாகவே ‘ரெமோ’ டிரைலருக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்துள்ளன. தற்போது 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களைக் கடந்து ‘ரெமோ’ டிரைலர் ரசிகர்களால் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரஜினியின் ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’, அஜித்தின் ‘வேதாளம்’, விக்ரமின் ‘ஐ’ படங்களுக்குப் பிறகு 1 மில்லியன் பார்வையிடல்களை விரைவாகக் கடந்த டிரைலராக ‘ரெமோ’வும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.#Remo #Sivakarthikeyan #24AMStudios #Kabali #Vedalam #Theri #I #Rajinikanth #Ajith #Vijay #Vikram #KeerthySuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;