விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் கேத்ரின் தெரெசா!

கார்த்தி, விஷாலை தொடர்ந்து விஷ்ணுவுடன் ஜோடி சேரும் கேத்ரின் தெரெசா!

செய்திகள் 20-Sep-2016 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கிய விஷ்ணு விஷாலுக்கு இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தனது இரண்டாவது பட தயாரிப்பில் இறங்கியுள்ள விஷ்ணுவிஷால் அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்கிறார. இந்த படத்தின் பூஜை கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக நடிக்க ‘மெட்ராஸ்’ பட கதாநாயகி கேத்ரின் தெரெசா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா நடித்து வரும் ‘கடம்பன்’ படத்திலும் கேத்ரின் தெரெசா தான் கதாநாயகி! சுசீந்திரன் இயக்கத்தில ‘மாவீரன் கிட்டு’ படத்தில் நடித்து முடித்துள்ள விஷ்ணு விஷால் தனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கிறார். விஷ்ணு விஷாலின் இரண்டாவது தயாரிப்பான இப்படத்திற்கு விஷ்ணு விஷால் நடித்த ‘முண்டாசுபட்டி பட இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார்.

#VelainuVandhuttaVellaikaaran #VishnuVishal #Muruganantham #SeanRoldan #CatherineTresa #Mundasupatti #Dhanush #PowerPandi #Rajkiran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜோக்கர் - என்னங்க சார் பாடல் வீடியோ


;