3வது முறையாக டிசம்பரில் களமிறங்கும் சூர்யா!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்’ 3வது பாகமான ’எஸ் 3’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 19-Sep-2016 5:15 PM IST Chandru கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்’ 3ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவோடு இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் செய்தி பரவியது. ஆனால், அப்போது அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ‘சிங்கம் 3’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். ‘எஸ் 3’ படம் கிறிஸ்துமஸுக்கு ஒரு வாரம் முன்பாக டிசம்பர் 16 (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சூர்யா நடித்து வெளிவந்த ‘ஆறு’ (டிசம்பர் 9), ‘மௌம் பேசியதே’ (டிசம்பர் 13) படங்களும் டிசம்பர் ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

#Singam3 #Suriya #Hari #Anushka #ShrutiHaasan #HarrisJayaraj #StudioGreen #Naaser#RadhaRavi #S3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;