’ஜெயம்’ ரவியுடன் இணையும் ‘ஒரு நாள் கூத்து’ ஹீரோயின்!

‘ஒரு நாள் கூத்து’ ஹீரோயினுக்கு குவியும் பட வாய்ப்புகள்!

செய்திகள் 19-Sep-2016 4:45 PM IST VRC கருத்துக்கள்

‘மிருதன்’ பட இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும், நடிகர் ஜெயம் ரவியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘டிக் டிக் டிக்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்றும் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்க ’ஒரு நாள் கூத்து’ பட ஹீரோயின் நிவேதா பெதுராஜ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தளபதி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நிவேதா தான் ஹீரோயின்! இந்தியாவிலேயே முதன் முதலாக விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை வைத்து உருவாக்கும் இப்படத்தை ‘டிக் டிக் டிக்’ படத்தை நேமி சந்த் ஜபக் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

#NivethaPethuraj #TikTikTik #JayamRavi #SakthiSoundarrajan #OruNaalKoothu #Miruthan #UdhayanidhiStalin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;