ஹாரிஸ் ஜெயராஜின் உலகத்தரம் வாய்ந்த ஒலிப்பதிவு கூடம் ‘STUDIO-H’

ஹாரிஸ் ஜெயராஜின் அதிநவீன ஒலிப்பதிவு கூடம் ‘STUDIO-H’

செய்திகள் 19-Sep-2016 3:05 PM IST VRC கருத்துக்கள்

’இருமுகன்’ பட சக்சஸ் மீட்டில் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை சந்தித்து பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

நான் இசை அமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதாக கூறுகிறார்கள், அது உண்மை தான்! அதற்கு காரணம் தரமான இசை கொடுக்க வேண்டும் என்பது தான்! ‘இரு முகன்’ படத்தின் டி.டி.எஸ்.பணியிலும் கூட நான் ஈடுபட்டேன். இது நிறைய பேருக்கு தெரியாது. நன்றாக சமைப்பது மட்டும் விஷயம் இல்லை. அதை ருசித்து, ரசித்து சாப்பிடும் விதமாக பறிமாறவும் வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த சமையலுக்கு அர்த்தம் கிடைக்கும். அதை தான் நான் செய்கிறேன். ஹாலிவுட் தரம் என்கிறார்கள்! அந்த வகையில் ஒலிப்பதிவில் நாம் எப்போதோ ஹாலிவுட்டை மிஞ்சி விட்டோம். என்னை பொறுத்தவரை பட எண்ணிக்கை முக்கியமில்லை! தரம் தான் முக்கியம்! வருடத்திற்கு 3 படங்கள் பண்ணினால் கூட போதும். நான் அடிப்படையில் ஒரு கீ-போர்ட் புரோகிராமர் என்பதால் குவாலிட்டியில் அதிக கவனம் செலுத்துகிறேன்.

இசையை குவாலிட்டியாக கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘STUDIO-H’ என்ற பெயரில் ஒரு ஒலிப்பதிவு கூடத்தை கட்டியுள்ளேன். சென்னை வளசரவாக்கத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ஒலிப்பதிவு கூடம் உலக தரத்தில் இருக்கும். அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து அதி நவீன இசை கருவிகளை நிறுவியுள்ளேன். இந்த ஒலிப்பதிவு கூடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து இசை அமைக்க முடியும். சினிமாவில மீண்டும் ‘லைவ் இசை’யை கொண்டு வரவேண்டும் என்பது என் ஆசை! ’இரு முகன்’ படத்தின் பெரும்பாலான இசை பணிகள் இந்த ஸ்டுடியோவில் தான் நடைபெற்றது. இந்த ஒலிப்பதிவு கூடத்தின் அதிகாரபூர்வமான திறப்பு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது’’ என்றார் ஹாரிஸ் ஜெயராஜ்!

#HarrisJayaraj #Irumugan #YennaiArindhaal #Gethu #STUDIO-H #Vikram #Nayanthara #AnandShankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;