‘ஆரோகணம்’ ‘நெருங்கி வா முத்தமிடாதே’ ஆகிய படங்களை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம், ‘அம்மணி’. அடுத்த மாதம் 14 -ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலரை எஸ்.ஜே.சூர்யா, நேற்று முன் தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பட குழுவினரை வாழ்த்தியுள்ளனர். ‘டேக் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் வெண் கோவிந்தா தயாரித்துள்ள இப்படத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலட்சுமி முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் நிதின் சத்யா, ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான், ஸ்ரீபாலாஜி, ரெஜின் ரோஸ், ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர். கே இசை அமைத்துள்ளார்.
#SJSuriyah #Ammani #Lakshmiramakrishnan #NithinSathya #Subbulakshmi #RoboShankar #SriBalaji
விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’. இந்த படம் சென்ற 21-ஆம் தேதி...
‘ஒரு நாள் கூத்து’ படப் புகழ் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர்,...
‘அம்மணி’ படத்தை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ஹவுஸ் ஓனர். இந்த படத்தில் ‘ஆடுகளம்’...