Direction : Jaypee
Production : Devikiran Movies
Starring : Karan, Neha Ratnakaran
Music : VidyaSagar
Cinematography : Harmugg
Editing : V. J. Sabu Joseph
அறிமுக இயக்குனர் ஜேப்பி இயக்கத்தில் கரண் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள் ‘உச்சத்துல சிவா’ எப்படி?
கதைக்களம்
கால் டாக்சி டிரைவர் கரண்! அம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர். மறுநாள் காலை பெண் பார்க்க போக வேண்டும் என்ற நிலையில் இரவு ஒரு இடத்துக்கு கார் ஓட்டி செல்கையில் மணக்கோலத்தில் இருக்கும் ஒரு பெண் ஆபத்திலிருந்து தப்பித்து வந்து திடீரென்று கரணின் காரில் ஏறுகிறார். அந்த பெண்ணுக்கு உதவி செய்யும் கரண் போலீஸில் மாட்டிக்கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கிறார்! அந்த பிரச்சனைகள் என்ன? அந்த பெண்ணை எதற்காக துரத்தி வந்தார்கள்? அவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கு பதில் தரும் படமே ‘உச்சத்துல சிவா’.
படம் பற்றிய அலசல்
ஒரு இரவில் நடக்கும் ஆக்ஷன் கதை! அதை, காதல், டூயட், காமெடி என கலந்து இயக்கியிருக்கிறார் ஜேப்பி. ஆனால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பயணிக்கும் திரைக்கதைக்கு நடுவே அடிக்கடி டூயட் மற்றும் காமெடி காட்சிகள் வருவதால் போரடிக்க வைக்கிறது. ஆக்ஷன் கதைகளில் லாஜிக் மீறல்கள் இருக்கும்தான் என்றாலும், திரைக்கதையையாவது கொஞ்சம் பலமாக அமைத்திருக்கலாம். உலக அளவிலான போதை பொருள் கடத்தல் கிரிமினல்கள் என்று காட்டி விடும் இயக்குனர் அதற்கான சீரியஸ் விஷயங்களை படத்தில் கடைபிடிக்கவில்லை. அதனால் இது ஆக்ஷன் படமா? காமெடி படமா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள வித்யாசாகரின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என்றால், ஹார்முக்கின் ஒளிப்பதிவு, சாபு ஜோசஃபின் படத்தொகுப்பு முதலான டெக்னிக்கல் விஷயங்களில் இன்னும் அதிகப்படியான உழைப்பைக் கொட்டியிருக்கலாமோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.
நடிகர்களின் பங்களிப்பு
காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என்று களமிறங்கியுள்ள கரணின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பாராட்டு பெறும் ரகம்! அப்பாவிப் பெண்ணாக வந்து திடீரென்று ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் நேஹாவுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். புத்திசாலியான போலீஸ் அதிகாரியாக வரும் இளவரசு, கிரிமினல்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் ரமேஷ் கண்ணா ஆகியோர் காமெடியில் கலக்குகிறார்கள். போதைப் பொருள் கடத்தல் தலைவனாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என்றால், இன்டர்நேஷனல் கிரிமினலாக வருபவர் தோற்றத்தால் மிரட்டுகிறார்!
பலம்
1. ஒரு இரவில் நடப்பது மாதிரியான கதைக்களம்
2. கரண், நேகா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரின் சிறந்த பங்களிப்பு
பலவீனம்
1. அதிகப்படியான லாஜிக் மீறல்கள்
2. குழப்பமான திரைக்கதை
3. இசை தவிர்த்து மற்ற டெக்னிக்கல் விஷயங்கள்
மொத்தத்தில்...
குணச்சித்திர நடிகராக தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கி வில்லனாக உயர்ந்து ஹீரோ அந்தஸ்தையும் அடைந்தவர் கரண். அவரின் அபாரமான நடிப்புத் திறமையே அவரை இத்தனை உயரங்களுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் கரணின் சமீபகாலப் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷனை முன்னிறுத்தியே வெளிவந்து கொண்டிருக்கின்றன. தன் நடிப்புக்குத் தீனி போடும் படங்களை அவர் தேர்வு செய்து மீண்டும் நடிப்பார் என நம்புவோம். கரண் உச்சத்திற்குச் செல்வதற்கு இப்படம் எந்த அளவுக்கு உதவும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒரு வரி பஞ்ச் : சறுக்கல்!
ரேட்டிங் : 3.5/10
#UchathulaShiva #Karan #NehaRatnakaran #Jaypee #VidyaSagar #Harmugg #UchathulaShivaReview
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...