தேனியில் துவங்கியது உதயநிதி படம்!

டி.இமான் இசை அமைக்கும் உதயநிதியின் 3 படங்கள்!

செய்திகள் 19-Sep-2016 11:44 AM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சாரபில் என்.ராமசாமி தயாரிப்பில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் துவக்க விழா இன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குனர் தளபதி இயக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் கதாநாயகியாக ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கதாநாயகியாக நடித்த நிவேதா பெதுராஜ் நடிக்கிறார். காமெடி கேரக்டரில் சூரி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படம் தவிர எழில் இயக்கத்தில் ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ சிகரம்தொடு’ பட புகழ் கௌரவ் இயக்கத்தில் ஒரு படம் என உதயநிதி கையில் இப்போது மூன்று படங்கள் இருக்கிறது. இந்த மூன்று படங்களுக்கும் இசை அமைப்பாளர் டி.இமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

#UdhanidhiStalin #SriThenandalFilms #ThalapthiPrabhu #NivethaPethuraj #OruNaalKoothu #DImman #Gaurav #Ezhil #SaravananIrukkaBayamen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;