சூர்யாவின் ‘சிங்கம் 3’ ரிலீஸ் எப்போது?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் 3’ படம் எப்போது வெளியாகும்?

செய்திகள் 19-Sep-2016 10:28 AM IST Chandru கருத்துக்கள்

முதல் இரண்டு பாகங்களும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளதால், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்’ 3ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவோடு இப்படத்தில் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் செய்தி பரவியது. ஆனால், அப்போது அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ‘சிங்கம் 3’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்க இருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகுமா? பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுமா? அல்லது வேறு ஏதேனும் நாளில் களமிறங்குமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

#Singam3 #Suriya #Hari #Anushka #ShrutiHaasan #HarrisJayaraj #StudioGreen #Naaser#RadhaRavi #S3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;