வைரலாகப் பரவும் சைத்தான், ரெமோ போஸ்டர்ஸ்!

விஜய்ஆண்டனியின் ‘சைத்தான்’ பட டீஸரும், சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பட டிரைலரும் இன்று வெளியாகவிருக்கின்றன

செய்திகள் 19-Sep-2016 10:04 AM IST Chandru கருத்துக்கள்

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக திரையுலகில் நுழைந்த ஒருவர், டிவி காம்பியராக இருந்து காமெடியனாக வெள்ளித்திரையில் நுழைந்து இன்று முன்னணி நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கும் இன்னொருவர். இருவருமே தங்களின் அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார்கள். ஒருவர் விஜய் ஆண்டனி, இன்னொருவர் சிவகார்த்திகேயன்.

வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேடிப்பிடித்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் ‘சைத்தான்’. வழக்கம்போல் படத்தலைப்பிலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இப்படம் ஃபர்ஸ்ட்லுக்கிலும் அசத்தியது. அதுமட்டுமின்றி அதன்பிறகு வெளியான ஒவ்வொரு போஸ்டருக்குமே ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்தது. லேட்டஸ்ட்டாக ‘சைத்தான்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும், அதோடு இன்று மாலை ‘சைத்தான்’ படத்தின் டீஸர் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளிவந்தது. வழக்கம்போல் இந்த போஸ்டரும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தவிர, போஸ்டரில் விஜய்ஆண்டனியின் கண்கள் ‘ஹாரர்’ எஃபெக்ட்டோடு உருவாக்கப்பட்டிருந்ததால், ‘சைத்தான்’ பேய்ப்படமா என்றொரு எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கான விடை இன்று மாலை 6.30 மணிக்குத் தெரிய வரும்.

ஒரேயொரு நர்ஸ் கெட்அப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பிப்பார்க்க வைத்தார் ‘ரெமோ’ சிவகார்த்திகேயன். பிரம்மாண்ட படம், அனிருத்தின் அசத்தல் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவை என டெக்னிக்கலாக உச்சம் தொட்டிருக்கும் ‘ரெமோ’ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. அறிவிப்போடு வெளியிடப்பட்ட ‘மர்லின் மன்றோ’ ஸ்டைல் சிவகார்த்தியன் ‘லுக்’தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ‘ரெமோ’ எப்படிப்பட்ட படமாக இருக்கும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சைத்தான் டீஸரும், ரெமோ டிரைலரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தருமா என்பதை இன்று மாலை தெரிந்து கொள்ளலாம்.

#Remo #BhagyarajKannan #RDRaja #24AMStudios #Sivakarthikeyan #Anirudh #KamalHaasan #AvvaiShanmughi #KeerthiSuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;