தாமிரா இயக்கத்தில் ‘ஆண் தேவதை’யாக மாறும் சமுத்திரக்கனி!

‘ரெட்டச்சுழி’ தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் படத்திற்கு ‘ஆண் தேவதை’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்

செய்திகள் 17-Sep-2016 3:31 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனராக தமிழ்த்திரையுலகில் பிரபலமடைந்த சமுத்திரக்கனி இப்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். கொளஞ்சி, சட்டம், கிட்டனா உட்பட தமிழ், மலையாளப் படங்கள் பலவற்றை கையில் வைத்திருக்கும் சமுத்திரக்கனி அடுத்ததாக தாமிரா இயக்கத்தில் ‘ஆண் தேவதை’ என்ற படத்தில் நடிக்கிறார். பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கியவர் தாமிரா என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆண்தேவதை'யில் சமுத்திரக்கனியுடன் இணைந்து ரம்யா பாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் உட்பட ​மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதையைக் கொண்ட இப்படத்தில், ‘ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்து​ச் செல்கிறது’ என்பதையும் படம் உணரவைக்கும்.

'சிகரம் சினிமாஸ்' என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து ​ஃ​பக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கை கோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு திரைக்களத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் தாமிரா. முழுக்க முழுக்க சென்னையில் உருவாகவுள்ள 'ஆண்தேவதை' யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

#AanDevathai #Samuthirakani #Thamira #RamyaPandian #Kavin #Mayilsamy #ArunMozhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;