Direction : Sumanth Radhakrishnan
Production : Knockout Entertainment, Paranjothi Productions
Starring : Sumanth Radhakrishnan, Suja Varunee, Rohit Nair, Sanam Shetty
Music : Girishh Gopalakrishnan
ஹாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானா ‘SAW’ படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் என்பதுடன் இந்தியாவின் முதல் PHILANTHROPIC திரைப்படம் என்ற சிறப்புக்களுடன் வெளிவந்திருக்கும் ‘சதுரம்-2’ எப்படி?
கதைக்களம்
சதுரமான ஒரு அறை! அந்த அறை நடுவே கொடூரமான முறையில் கொல்லப்பட்டவரை போல் ஒருவர் படுத்து கிடக்கிறார். அதைப் போல டாக்டர் ஒருவரும், ஃபோட்டோ கிராஃபர் ஒருவரும் காலில் சங்கிலியுடன் எதிரெதிர் முனையில் கட்டப்பட்டிருக்கிறார்கள். இருவர் பாண்ட் பாக்கெட்டிலும் ஆடியோ கேசட் ஒன்று உள்ளது. அதில் இருவருக்கும் அந்த அறைக்குள் இருந்து தப்பிக்க தேவையான சில அடையாளங்கள் குறித்த தகவல்கள் இருக்கிறது. மேலும் மாலை 6 மணிக்குள் தப்பிக்க வேண்டும் என்றும், அப்படி தப்பிக்க் முடியாவிட்டால் அறைக்குள் இறந்து கிடப்பவரை போன்று கொடூரமான முறையில் கொல்லப்படுவார்கள் என்ற தகவலும் இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து இருவரும் தப்பித்தார்களா? எதற்காக அவர்களை அந்த அறைக்குள் சங்கிலியால் கட்டிப் போட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்? அவர்களுக்குள் இருக்கும் தொடர்பு என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தரும் படமே ‘சதுரம்-2’.
படம் பற்றிய அலசல்
சமூகத்தில நம் கண் முன் நடைபெறும் சில தவறான சம்பவங்களை பாரக்கும்போது அதை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணமும், கோபமும் வரும். அப்படி ஒருவருக்கு ஏற்படும் கோபத்தின் விளைவாக நடைபெறும் சம்பவங்களே இந்த ‘சதுரம்’. இது ஒரு ரீமேக் படம் என்பதால் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணனுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் ரசிக்கும்படியான ஒரு த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார். ‘SAW’ படத்தில் இடம் பெற்றிருந்த கொடூர கொலை வன்முறை காட்சிகளை அப்படியே ஃபாலோ பண்ணாமல் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி காட்சிகளை அமைத்து படமாக்கியிருப்பதால் இப்படம் அனைவரும் பாரக்க கூடிய படமாக அமைந்துள்ளது. அடிக்கடி வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள், படத்தின் முக்கால் வாசி காட்சிகளும் ஒரே அறையில் படமாக்கப்பட்டிருப்பது போன்ற சில விஷயங்கள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் படத்தை பார்த்த திருப்தியை நமக்கு ஏற்படுத்துகிறது ‘சதுரம்’. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு கை கொடுத்துள்ளது.
நடிகர்களின் பங்களிப்பு
டாக்டராக வரும் யோக் ஜேப்பி, ஃபோட்டோ கிராஃபராக வரும் ரியாஸ் இருவரும் உயிருக்காக நடத்தும் போராட்டங்களை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். கர்ப்பிணியாக வரும் சுஜா வாருண்ணி, அவரது அன்பு கணவராக வரும் ரோஹித் நாயர் சென்டிமெண்ட் காட்சிகளில் இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள்! சைக்கோவாக வருபவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சனம் ஷெட்டி, கௌஷிக் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
பலம்
1. வித்தியாசமான கதைக்களம்
2. விறுவிறுப்பான காட்சி அமைப்புகள்
பலவீனம்
1. குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அடிக்கடி வரும், ஃப்ளாஷ் பேக் காட்சிகள்
2. முக்கால் வாசி படமும் ஒரே இடத்தில் நகர்வது
மொத்தத்தில்
ஆங்கில ‘SAW’வின் விறுவிறுப்பும் பரபரப்பும் இப்படத்தில இல்லை என்றாலும் வித்தியாசமான ஒரு த்ரில்லர் படத்தை பார்க்க விரும்புவோர் இந்த ‘சதுரத்து’க்கு வரலாம்.
ஒரு வரி பஞ்ச் : நான்கு சுவர்களுக்குள் நடக்கும் போராட்டம்!
ரேட்டிங் : 4.5/10
1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா....
‘ராகதேவி புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் குப்புசாமி தயாரித்துள்ள படம் ‘தகடு’....
கிரௌட் ஃபண்டிங் முறையில் தயாராகி பெரும் வெற்றிபெற்ற கன்னட படம் ‘லூசியா’. இப்படத்தைப் போன்று...