விவாகரத்து குறித்து சௌந்தர்யா விளக்கம்!

விவாகரத்து பெறும் ரஜினியின் இளைய மகள்!

செய்திகள் 17-Sep-2016 12:17 PM IST VRC கருத்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளும், ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவருமான சௌந்தர்யா, கடந்த 2010-ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டுகாலமாக சௌந்தர்யா அஸ்வினை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும், விரைவில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் மீடியாக்களில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இது குறித்து சௌந்தர்யாவே தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘News about my marriage is true. We have been separated for over a year & divorce talks are on. I request all to respect my family's privacy’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா, அஸ்வின் தம்பதியர் விவாகரத்து பெறுவது உறுதியாகியுள்ளது.

#SoundaryaRajinikanth #Rajini #Superstar #Kabali #Ashwin #Aishwarya #Dhanush #LathaRajinikanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;