கார்த்தி நடித்த ‘சகுனி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்புத்துறையில் களமிறங்கியது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். அதனைத் தொடர்ந்து அதன் 2வது படைப்பாக சமீபத்தில் வெளிவந்த படம் ‘ஜோக்கர்’. அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும் அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது கார்த்தியின் ‘காஷ்மோரா’. இந்த பிரம்மாண்ட படத்தை அடுத்து இந்நிறுவனத்தின் ‘அருவி’, ‘கூட்டத்தில் ஒருவன்’ ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன.
எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பாபு ஆகியோர் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சூர்யா. தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 3’யில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 35வது படத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து உருவாகவிருக்கும் சூர்யாவின் 36வது படத்தைத்தான் தயாரிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும் கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
#Suriya #Singam3 #DreamWarriorPictures #Joker #Kaashmora #SRPrabhu #SRPrakashBabu #VigneshSivan #S3
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...