திடீர் திருமணம் செய்து கொண்ட சாதனா டைட்டஸின் பரபரப்பு அறிக்கை!

ரகசிய திருமணம் செய்துகொண்ட ‘பிச்சைக்காரன்’ கதாநாயகி!

செய்திகள் 17-Sep-2016 11:56 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனியுடன் ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த சாதனா டைட்டஸ் தற்போது ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ‘திட்ட்ம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாதனா டைட்டஸும், ‘பிச்சைக்காரன்’ படத்தை விநியோகம் செய்த ‘கே.ஆர்.ஃபிலிம்ஸ்’ அதிபர் கார்த்திக் என்பவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது! இந்நிலையில் இது குறித்து கார்த்திக்கும், சாதனா டைட்டஸும் இணைந்து ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,

‘‘கார்த்திக், சாதனா டைட்டஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதாரா காதலித்து இருவரின் பரிபூர்ண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்துகொண்டோம். வரும் ஜனவரி 2017-ல் எங்கள் இரு குடும்பங்களும், சுற்றமும், நட்புறவுகளும் கூட பெரும் மதிப்புக்குரிய பத்திரிகையாளர்கள் ஆதரவுடன் பிரம்மாண்டமான முறையில் எங்கள் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

#VijayAntony #Pichaikkaran #SatnaTitus #ThittamPottuThirudumKoottam #Kayal #Chandran #Parthiepan #Karthik

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;